கிளை நூலகம், கடத்தூர்.
தமிழ்நாடு அரசு -
பொது நூலகத்துறை,
தருமபுரி மாவட்டம்.
கிளை நூலக கூடுதல் கட்டடம் திறப்பு விழா:
நூலக கட்டடம் ஒரு வழியாக திறந்து வைக்கப்பட்டது. சிறப்பான விழாவாக நடத்தலாம் என்று இருந்தோம். ஆனால் சூழ்நிலை கருதி எளிமையாக நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றி:
நூலகத்திற்கு நிதி ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆ. கோவிந்தசாமி அவர்களுக்கும், இந்த கட்டடம் கட்ட நிதி ஒதுக்க உறுதுணையாக இருந்த சந்தோஷ், சபியுல்லா முதலானோருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பழுதடைந்த பழைய கட்டடத்தை இடிக்க தடையின்மைச் சான்றிதழ் இரண்டு வாரத்தில் வாங்க பல வகையில் உதவி செய்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ஆர். அப்பாவு, பொறியாளர் கணேசன் பிள்ளை ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குளிர்சாதன வசதி: புதிய நூலக கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி ரூபாய் 20 லட்சம். இந்த தொகையில் நூலகத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து, இரண்டு அடுக்கு கட்டடம் கட்டுவது என்பதாகும். குளிர்சாதன வசதி இந்த மதிப்பீட்டில் இல்லை. நூலகத்திற்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்தித் தர சட்ட மன்ற உறுப்பினர் ஆர்வம் காட்டினார். கட்டடம் கட்டி முடித்ததும், குளிர்சாதன பெட்டிகள் வாங்க quotation வாங்கி தருமாறு சட்ட மன்ற உறுப்பினர் ஒப்பந்தாரரிடம் கேட்டார். ஒப்பந்ததாரர் என்னிடம் எத்தனை குளிர்சாதன பெட்டிகள் தேவை என்று கேட்டார். கடத்தூர் கிளை நூலகத்திற்கு குளிர்சாதன வசதி தேவையில்லை என்று நான் கூறிவிட்டேன். காரணம், குளிர்சாதன வசதி செய்தால் மின்கட்டணம் ரூ. 15 ஆயிரம் வரும். கடத்தூர் கிளை நூலகத்திற்கு மின்கட்டணம் செலுத்த அரசு ஒதுக்கியுள்ள நிதி இரண்டு மாதத்திற்கு ரூபாய் ஆயிரம் மட்டுமே. மீது 14 ஆயிரத்திற்கு எந்த வாசகரிடம் நான் கேட்க முடியும்? அதனால்தான் குளிர்சாதன வசதி தேவையில்லை என்று கூறிவிட்டேன்.
ஒப்பந்ததாரர்களுக்கு நன்றி:
மதிப்பீட்டில் கொடுக்கப்பட்டுள்ள அளவை விட ஒரு அடி தரையை உயர்துமாறும், பழைய கட்டடத்தை இணைக்க வசதியாக காங்கிரீட் போட்டு கதவு வைத்துத் தருமாறும், புதிய கட்டத்தை சுற்றியும் சிமெண்ட் தரை போட்டுத் தருமாறும் நான் வைத்த கோரிக்கையை ஏற்று, அவற்றை செய்து கொடுத்த ஒப்பந்ததாரர் திரு. பி. சின்னசாமி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்கொடை வழங்கியோர்க்கு நன்றி:
இரண்டு கட்டடங்களுக்கும் இணைப்பு ஏற்படுத்தியது, பழைய கட்டடத்தின் உட்புறமும் வெளிப்புறமும் வண்ணம் தீட்டியது, நூலக கட்டடத்தின் பின்புறம் பத்தடி நீளத்திற்கு காம்பவுண்ட் சுவர் கட்டியது, நூலகத்தின் முன்புறம் கேட் வைத்து கம்பி வேலி அமைத்தது , சாய்தளம் அமைத்தது, பழைய தளவாடங்களை புதுப்பித்தது, கணினி டேபிள் பெஞ்ச் வாங்கிது, குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருந்தியது போன்ற பல்வேறு பணிகள் கடந்த சில மாதங்களாக செய்து வந்தோம். இன்று வரை சுமார் 90 ஆயிரம் செலவு செய்து இருக்கிறோம். இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் தேவையான நிதி நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்டது . தாராளமாக நிதி வழங்கிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாசகர் வட்ட நிர்வாகிகளுக்கு நன்றி:
இவ்வளவு பணிகளையும் செய்து முடிக்க என்னோடு இணைந்து பணியாற்றிய வாசகர் வட்ட தலைவர் மருத்துவர் சந்திரசேகரன், பொருளாளர் மலர்வண்ணன், நெடுமிடல், கே.டி.முருகன், மகாலிங்கம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வாசகர் வட்ட நிர்வாகிகள் அனைவரும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி:
நூலகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்திகளாக மக்களிடம் அவ்வப்போது கொண்டு சேர்த்தது வரும் பத்திரிகை நிருபர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாவட்ட நூலக அலுவலருக்கு நன்றி:
கடத்தூர் கிளை நூலகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு அவ்வப்போது நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய இந்நாள் மற்றும் முன்னாள் மாவட்ட நூலக அலுவலர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
_ சி. சரவணன், நூலகர்,
கிளை நூலகம், கடத்தூர்.
அறிமுகம்:
கடத்தூர் கிளை அலுவலகம் 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்பொழுது உள்ள கட்டடத்தில் 2000 ஆம் ஆண்டு முதல் நூலகம் இயங்கி வருகிறது.
· இந்த நூலகம் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. நூலகம் கடத்தூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் நூலகத்திற்கு எளிதாக வர முடிகிறது.
· இந்த நூலகத்தில் செய்தித்தாள் பிரிவு, சஞ்சிகைப் பிரிவு, சிறுவர் பிரிவு, இணையதள வசதியுடன் கூடிய கணினி பிரிவு - இயங்கி வருகிறது.
· இந்த நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டச் செயல்படுகிறது. இதன் மூலம் நூலக சேவையை நேரில் வந்து பெற முடியாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில், அவர்கள் இல்லங்களுக்கே சென்று புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
· இந்த நூலகத்தின் மூலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று, மாணவர்களுக்கு நூலக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
· இந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் புத்தக கண்காட்சிகள் நடத்தி, புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி படிப்பதற்கான வாய்ப்புகளை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
· தற்பொழுது 20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டடுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவுற்றதும் நூலக சேவை மேலும் விரிவாக்கம் செய்யப்படும்.
· இந்த நூலகத்தில் அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக முதல் தளத்தில் குளிர்சாதன வசதியுடன் கூட்ட அரங்கம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்குத் தேவையான மேசை, நாற்காலிகள், ஒலிபெருக்கி(Mic Set), குடிநீர் சுத்திகரிப்பு (RO) முதலானவை நன்கொடையாகப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- சி.சரவணன், நூலகர், கிளை நூலகம், கடத்தூர்.
நூலத்தின் இருப்பிடத்தை அறிய கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும் (map):
குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்ட: Click Here
தமிழ் இலக்கிய நூல்களை படிக்க: Click Here
நூலக வார விழா மலர்2021 படிக்க: Click Here
நூலக வார விழா மலர் 2017 படிக்க: Click Here
தமிழ் பழமொழிகள் படிக்க: Click Here
தகடூர் நாடு செந்தமிழ் நாடு நூலை படிக்க Click Here
இந்தியாவில் நூலக வளர்ச்சி நூலை படிக்க Click Here
கத்தரிகாய் சாம்பார் நகைச்சுவை கட்டுரைகள் நூலை படிக்க Click Here
Useful Websites - பயனுள்ள இணையதளங்கள் :
தமிழ்நாடு பொது நூலக இயக்ககம்: https://tamilnadupubliclibraries.org/
அண்ணா நூற்றாண்டு நூலகம் : http://www.annacentenarylibrary.org/
தமிழிணையம் - மின்நூலகம் : https://www.tamildigitallibrary.in/
இந்திய தேசிய நூலகம்: https://ndl.iitkgp.ac.in/
தமிழ்நாடு அரசு: https://www.tn.gov.in/
தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் : https://www.tnpsc.gov.in/
நூலகர் செய்தி இணையதளம்: https://www.noolagarseithi.co.in/
நூலகர் செய்தி மடலை படிக்க: https://noolagarseithimadal.blogspot.com/
புதுமலர் சிறுவர் மின் இதழ் : https://puthumalar2023.blogspot.com/
For Contact Us:
Librarian, Branch Library,
153, Salem Road,
Opposite New Bus Stand,
Kadathur - Post, Pappireddippatti - Tk.,
Dharmapuri - Dt.
Tamil Nadu, India. 635 303.
Mobile: 9442265816, 86681 92839
saravanan.c.lib@gamil.com.
Phone: 04346 0000