Programs
நூலகத்தில் நடைபெற்ற நிகழ்சிகளில் சில ...
இன்று கடத்தூர் கிளை நூலகத்திற்கு திரு. சி. காமராஜ் ஐ.ஏ.எஸ். அவர்கள் வருகை தந்தார். அவருக்கு புத்தகம் கொடுத்து வரவேற்றேன். நூலகத்திற்கு அவர் நன்கொடையாக வழங்கிய குடிநீர் சுத்திகரிப்பு கருவியை இன்று வாசகர் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். வாசகர்கள் சார்பாகவும் நூலகர் சார்பாகவும் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(அவரது பதிவு: எங்கள் ஊர் அருகில் உள்ள கடத்தூர் கிளை நூலகத்திற்க்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் (Water purifier) ஓன்றினை படிப்பவர்களின் நன்மைக்காக இலவமாக வாங்கி கொடுத்தேன்.
நான் படிக்கின்ற காலத்தில் இந்த நூலகத்தின் மூலமாக ஏராளமான புத்தககங்களை படித்தேன். நான் எழுதிய பல தேர்விற்க்கு இந்த நூலகம் உதவியாக இருந்தது. என்னுடன் நண்பர்கள் மற்றும் நூலகர் உடன் இருக்கிறார்கள்.)
கிளை நூலக கூடுதல் கட்டடம் திறப்புவிழா:
கிளை நூலக கூடுதல் கட்டடம் திறப்புவிழா:
நூலக கட்டடம் ஒரு வழியாக திறந்து வைக்கப்பட்டது. சிறப்பான விழாவாக நடத்தலாம் என்று இருந்தோம். ஆனால் சூழ்நிலை கருதி எளிமையாக நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றி:
நூலகத்திற்கு நிதி ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆ. கோவிந்தசாமி அவர்களுக்கும், இந்த கட்டடம் கட்ட நிதி ஒதுக்க உறுதுணையாக இருந்த சந்தோஷ், சபியுல்லா முதலானோருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பழுதடைந்த பழைய கட்டடத்தை இடிக்க தடையின்மைச் சான்றிதழ் இரண்டு வாரத்தில் வாங்க பல வகையில் உதவி செய்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ஆர். அப்பாவு, பொறியாளர் கணேசன் பிள்ளை ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குளிர்சாதன வசதி: புதிய நூலக கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி ரூபாய் 20 லட்சம். இந்த தொகையில் நூலகத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து, இரண்டு அடுக்கு கட்டடம் கட்டுவது என்பதாகும். குளிர்சாதன வசதி இந்த மதிப்பீட்டில் இல்லை. நூலகத்திற்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்தித் தர சட்ட மன்ற உறுப்பினர் ஆர்வம் காட்டினார். கட்டடம் கட்டி முடித்ததும், குளிர்சாதன பெட்டிகள் வாங்க quotation வாங்கி தருமாறு சட்ட மன்ற உறுப்பினர் ஒப்பந்தாரரிடம் கேட்டார். ஒப்பந்ததாரர் என்னிடம் எத்தனை குளிர்சாதன பெட்டிகள் தேவை என்று கேட்டார். கடத்தூர் கிளை நூலகத்திற்கு குளிர்சாதன வசதி தேவையில்லை என்று நான் கூறிவிட்டேன். காரணம், குளிர்சாதன வசதி செய்தால் மின்கட்டணம் ரூ. 15 ஆயிரம் வரும். கடத்தூர் கிளை நூலகத்திற்கு மின்கட்டணம் செலுத்த அரசு ஒதுக்கியுள்ள நிதி இரண்டு மாதத்திற்கு ரூபாய் ஆயிரம் மட்டுமே. மீது 14 ஆயிரத்திற்கு எந்த வாசகரிடம் நான் கேட்க முடியும்? அதனால்தான் குளிர்சாதன வசதி தேவையில்லை என்று கூறிவிட்டேன்.
ஒப்பந்ததாரர்களுக்கு நன்றி:
மதிப்பீட்டில் கொடுக்கப்பட்டுள்ள அளவை விட ஒரு அடி தரையை உயர்துமாறும், பழைய கட்டடத்தை இணைக்க வசதியாக காங்கிரீட் போட்டு கதவு வைத்துத் தருமாறும், புதிய கட்டத்தை சுற்றியும் சிமெண்ட் தரை போட்டுத் தருமாறும் நான் வைத்த கோரிக்கையை ஏற்று, அவற்றை செய்து கொடுத்த ஒப்பந்ததாரர் திரு. பி. சின்னசாமி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்கொடை வழங்கியோர்க்கு நன்றி:
இரண்டு கட்டடங்களுக்கும் இணைப்பு ஏற்படுத்தியது, பழைய கட்டடத்தின் உட்புறமும் வெளிப்புறமும் வண்ணம் தீட்டியது, நூலக கட்டடத்தின் பின்புறம் பத்தடி நீளத்திற்கு காம்பவுண்ட் சுவர் கட்டியது, நூலகத்தின் முன்புறம் கேட் வைத்து கம்பி வேலி அமைத்தது , சாய்தளம் அமைத்தது, பழைய தளவாடங்களை புதுப்பித்தது, கணினி டேபிள் பெஞ்ச் வாங்கிது, குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருந்தியது போன்ற பல்வேறு பணிகள் கடந்த சில மாதங்களாக செய்து வந்தோம். இன்று வரை சுமார் 90 ஆயிரம் செலவு செய்து இருக்கிறோம். இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் தேவையான நிதி நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்டது . தாராளமாக நிதி வழங்கிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாசகர் வட்ட நிர்வாகிகளுக்கு நன்றி:
இவ்வளவு பணிகளையும் செய்து முடிக்க என்னோடு இணைந்து பணியாற்றிய வாசகர் வட்ட தலைவர் மருத்துவர் சந்திரசேகரன், பொருளாளர் மலர்வண்ணன், நெடுமிடல், கே.டி.முருகன், மகாலிங்கம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வாசகர் வட்ட நிர்வாகிகள் அனைவரும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி:
நூலகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்திகளாக மக்களிடம் அவ்வப்போது கொண்டு சேர்த்தது வரும் பத்திரிகை நிருபர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாவட்ட நூலக அலுவலருக்கு நன்றி:
கடத்தூர் கிளை நூலகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு அவ்வப்போது நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய இந்நாள் மற்றும் முன்னாள் மாவட்ட நூலக அலுவலர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
_ சி. சரவணன், நூலகர்,
கிளை நூலகம், கடத்தூர்.
கடத்தூர் கிளை நூலகத்தில் காகித மடிப்புக் கலை பயிற்சி
கடத்தூர் கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கான காகித மடிப்புக் கலை பயிற்சி 24.5.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் வெ. சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் அர.கோகிலவாணி பயிற்சியைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோ. மலர்வண்ணன், கே. டி. முருகன், டி. முருகன், நெடுமிடல், கோ.மகாலிங்கம், இராதாகிருஷ்ணன், சாமிக்கண்ணு, விஜயகுமார், கே. உத்தமன் உள்ளிட்ட வாசகர் வட்ட நிருவாகிகள் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் தியாகசேகர் பயிற்சி வழங்கினார். இதில் 7 வகையான தொப்பிகள், மூன்று வகையான பெட்டிகள், வாத்து, மீன், கிளி , காற்றாடி போன்ற உருவங்கள் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. தகடூர் புத்தகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் இ. தங்கமணி சிறப்புரை ஆற்றினார். பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக நூலகர் சி. சரவணன் வரவேற்றார். முடிவில் அறிவுடைநம்பி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்குத் தகடுர் புத்தகப் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.
கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா
கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா இன்று கொண்டாடப் பெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் வெ. சந்திரசேகரன் தலைமை வகித்தார். நூலகத்தில் இந்த ஆண்டு அதிக நூல்கள் எடுத்து வாசித்த வாசகர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம. கௌரிசங்கர் பரிசு வழங்கினார். சிவலிங்கம், தமிழ்செல்வன், கே. டி. முருகன், சாமிக்கண்ணு, பாலு முன்னிலை வகித்தனர். கலைமகள் கல்வி நிறுவனங்கள் நிறுவனர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். கிருஷ்ணகிரி கவிஞர் தமிழவன் கவிதை வாசித்தார்.
தொடர்ந்து, தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற கடத்தூர் வாசகர் வட்டப் பொருளாளர் கோ. மலர்வண்ணன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இராஜகுமாரன், மதனகோபாலன், முகுந்தமாதவன், சித்ரா, நெடுமிடல், அரங்கநாயகி கண்ணன், வெ. குறள்மொழி, கா. முனியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக நூலகர் சி. சரவணன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் கோ. மகாலிங்கம் நன்றி கூறினார்.
வாசகர் வட்டக் கூட்டம்
கடத்தூர் கிளை நூலகத்தில் இன்று 16.05.2023, கடத்தூர் அன்பு அறக்கட்டளைக்கு வருகை புரிந்த, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரி இளங்கலை சமூகவியல் மாணவ, மாணவியர் 15 நாட்கள் படிப்பிடை பயிற்சியில் பல்நோக்கு திறனுக்காக கடத்தூர் கிளை நூலகத்தில் களஆய்வு மேற்கொண்டனர்.
யோஜனா, திட்டம், எம்ப்லாய்மென்ட் நியூஸ், தமிழரசு உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் பருவ இதழ்களின் முக்கியத்துவம் குறித்து நூலகர் சி.சரவணன் விளக்கினார். பயிற்சியில் பருவ இதழ்களின் வகைப்பாடு குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டது. உடன் எஸ். பூவேந்தரசு, மேலாண்மை அறங்காவலர், அன்பு அறக்கட்டளை, கடத்தூர்.
அனைவருக்கும் நூலக விழா மலர் மற்றும் நூலகர் சி,சரவணன் எழுதிய ஒரு நூலகரின் டைரி குறிப்புகள், தகடூர் நாடு செந்தமிழ் நாடு, இந்தியாவில் நூலக வளர்ச்சி, கத்திரிக்காய் சாம்பார் ஆகிய நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.
கடத்தூர் கிளை நூலகத்தில் இலவச வைஃபை திட்டம் தொடக்க விழா மற்றும் கடத்தூர் கிளை நூலக இணையதளம் தொடக்க விழா - 6.4.2023.
கடத்தூர் நூலகம் சார்பில் இலக்கியத் திருவிழா - 10. 3. 2023.
பாரதியார் பிறந்த நாள் விழா
ஸ்ரீ ஐயப்பா கல்லூரிவில் உலகப் புத்தக நாள் விழா
நத்தமேடு மேல்நிலைப் பள்ளியில் உலகப் புத்தக நாள் விழா
நூல் அறிமுக விழா
கடத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புத்தகத் திருவிழா
கடத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி - விற்பனை
சந்தப்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் உலகப் புத்தக நாள் விழா
ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி - விற்பனை
ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்கிய மாணவர்கள்
நல்லகுட்லஹள்ளி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நூலக வார விழா போட்டிகள்
நூலக வார விழா
மகாத்மா காந்தி 150 வது பிறந்த நாள் விழா -
நூல் அறிமுக விழா
முப்பெரும் விழா
ஒடசல்பட்டி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 3 நாள் புத்தகத் திருவிழா தொடக்க விழா
சந்தப்பட்டி பள்ளியில் நடைபெற்ற உலகப் புத்தக நாள் விழா
கிரீன் பார்க் பள்ளி மாணவர்கள் நூலக உறுப்பினர்களாக சேர்ந்த பொது...
பொது நூலக தின விழா
புத்தகத் திருவிழாவில் நூல் அறிமுக விழாவில் மாவட்ட நூலக அலுவலர் அவர்களுடன்
நூலகர் நின விழா
நூலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டிதருமாறு கோரிக்கை மனு அளித்தபொது...
சட்ட மன்ற உறுப்பினர் அவர்களுக்கு மரியாதை செய்தபோது..
புதுரெட்டியூரில் நடைபெற்ற நூலக நண்பர்கள் திட்ட விழிப்புணர்வு கூட்டம்.
நூலக வார விழாவில் குழந்தைகள் தின விழா
நூலக வார விழா
நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட சட்ட மன்ற உறுப்பினர் இடம் தேர்வு செய்தபோது
நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட பூமி பூசையில் சட்ட மன்ற உறுப்பினர் - முக்கிய பிரமுகர்கள்
புதிய கட்டடம் கட்டட நிதி ஒதுக்கி , கட்டடம் கட்ட பூமி பூசை செய்த சட்ட மன்ற உறுப்பினர் அவர்களுக்கு நூலகத்துறை சார்பில் நல்லாடை அணிவித்து மரியாதை செய்த போது.
நூலகர் செய்தி மடல் மின்னிதழ் வெளியீட்டு விழா
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற அகில இந்திய நூலக மாநாட்டில் பொது நூலகங்களின் சேவைகள் - மேம்படுத்த வேண்டியதன் அவசியம் என்னும் தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்து பேசியபோது.
கடத்தூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நூல் அறிமுக விழா
நல்லகுட்லஹள்ளி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நூலக வார விழாவில்...
நூலகர் தினத்தை முன்னிட்டு தமிழிசை வானொலியில் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் நூலகர்கள் என்னும் தலைப்பில் நேரலை நேர்காணல்
அகில இந்திய வானொலி தருமபுரி பண்பலையில் வாசிப்பை நேசிப்போம் என்னும் தலைப்பில் நேயர்களுடன் நேரலை
அகில இந்திய வானொலி தருமபுரி பண்பலையில் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நேரலை நேர்காணல்
MN TV கல்வி விடியல் நிகழ்ச்சியில் பொது நூலகங்களின் சேவைகள் என்னும் தலைப்பில் நடைபெற்ற நேரலை நேர்காணல்
நூலக வார விழா மலர் வெளியீட்டு விழா
தருமபுரி புத்தகத் திருவிழாவில்...